தமிழ்ச் சிறுகதைப் பெருந்தொகுப்பு
பனை வாழ்வின்
நூற்றாண்டுக் கதைகள்.
தமிழ்ச் சிறுகதைகளில் பனை வெறும் மரமாக மட்டும் தோன்றுவதில்லை. அது நிலம், தொழில், உணவு, உறவு, வலி, மாற்றம் ஆகியவற்றின் சாட்சியாக நிற்கிறது. அந்தப் பரந்த அனுபவத்தை 100 எழுத்தாளர்களின் 120 கதைகள் வழியே வாசிக்கச் செய்கிறது ‘பழம்படு பனை’.
- 100
- எழுத்தாளர்கள்
- 120
- சிறுகதைகள்
- 02
- தொகுதிகள்

ஒரு மரத்தின் வரலாறு—அதைச் சுற்றி வாழ்ந்த மக்களின் வரலாறும்கூட.
பனை · நிலம் · மக்கள் · நினைவுபழம்படு பனை / பனைக் கதைகள் 120
இரண்டு தொகுதிகள்.
ஒரே விரிந்த வாசிப்பு.


நூல் அறிமுகம்
சிறுகதைகளில் பதிவான பனைசார் உலகம்
நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் பனை எவ்வாறு பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தத் தொகுப்பு ஒரே இடத்தில் கொண்டு வருகிறது. பனைசார் மக்களின் உழைப்பு, வட்டார வாழ்வியல், கள் குறித்த சமூகப் பார்வைகள், மறைந்து வரும் புழங்குபொருட்கள், சந்தை மாற்றங்கள் ஆகியவை கதைகளின் வழியே பதிவாகின்றன.
இது பனையைப் புகழும் நினைவுத் தொகுப்பு மட்டும் அல்ல. பனையோடு இணைந்த வாழ்க்கையின் முரண்பாடுகளையும் மாற்றங்களையும் இலக்கியம் எவ்வாறு சாட்சியப்படுத்துகிறது என்பதற்கான விரிந்த வாசிப்பு.
அலர் வெளியீடு
நிலம், மக்கள், மொழி—இவற்றின் உறவை மையப்படுத்தும் பதிப்பு முயற்சி.
‘பழம்படு பனை’ நூலைப் பற்றியும் இந்தப் பதிப்பு முயற்சியைப் பற்றியும் மேலும் அறியுங்கள்.
எங்களைப் பற்றி