அலர்வெளியீடுமுன்பதிவு

எங்களைப் பற்றி

வாழ்வின் நுணுக்கங்களை
வாசிப்பில் பாதுகாக்கும்
பதிப்பு முயற்சி.

பழம்படு பனை முழுத் தொகுப்பு அட்டை
01 / அலர் வெளியீடு

ஒரு மரத்தை மையமாக வைத்து, ஒரு சமூகத்தின் பல கதைகளை வாசித்தல்

அலர் வெளியீடு, தமிழ்ச் சமூகத்தின் நிலம், உழைப்பு, நினைவு, மொழி ஆகியவற்றை இலக்கியத்தின் வழியே வாசகர்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறது. அதன் முக்கிய முயற்சியாக உருவானது ‘பழம்படு பனை — பனைக் கதைகள் 120’.

தமிழ்ச் சிறுகதைகளில் பனை எவ்வாறு ஒரு வாழ்வுலகமாகப் பதிவாகியுள்ளது என்பதை 100 எழுத்தாளர்களின் 120 கதைகள் வழியே இந்த இரண்டு தொகுதிகள் காட்டுகின்றன. பனைசார் மக்களின் வாழ்க்கையை ஒரே கோணத்தில் அழகுபடுத்தாமல், அதன் உழைப்பு, வலி, அரசியல், மாற்றம் அனைத்தையும் கதைகளின் வழியே வாசிக்க இடமளிக்கிறது.

01

மூலத்தின் மரியாதை

படைப்பின் மொழி, வட்டாரம், சமூகச் சூழல் ஆகியவற்றை சுருக்காமல் வாசகரிடம் கொண்டு சேர்த்தல்.

02

வாசிப்பின் அணுகல்

அரிய இலக்கியச் சான்றுகளை முழு உரையுடனும் தெளிவான தமிழ்ப் பொருளுடனும் வழங்குதல்.

03

தொடரும் ஆவணம்

ஒருமுறை முடிந்ததாக அறிவிக்காமல், புதிய சான்றுகளுக்கும் திருத்தங்களுக்கும் இடமளித்தல்.

இணைய முயற்சி

பனைக் களஞ்சியம்

பனை இடம்பெறும் தமிழ் இலக்கியப் பாடல்களை, முழு மூல உரை மற்றும் தமிழ்ப் பொருளுடன் வாசிக்க உருவாக்கப்படும் திறந்த தொகுப்பு.

களஞ்சியத்தைப் பார்வையிட